6 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 26 வயது இளைஞனுக்கு ஒடிஸா சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஒடிஸா ஜெகநாத்பூர் கிராமத்தில் கடைக்கு சென்ற 6வயது சிறுமியை காணவில்லை என அவளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் அன்று (2018 ஏப்ரல் 21) மாலை அப்பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் சிறுமி தலை, முகம் மற்றும் கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் துரதிஷ்ட வசமாக அந்த சிறுமி ஏப்ரல் 29, 2018 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த முஸ்தாக்(26) என்னும் இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஒடிஸா சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டனர். ஒடிஸாவில் போக்ஸோ நீதிமன்றங்கள் இரண்டு மாதங்களுக்குள் நான்கு மரண தண்டனைகளை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments