தெலங்கானா மாநிலத்தில் குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் தீபிகா. இவர், பி.டெக் முதலாம் ஆண்டு மாணவி , தேர்வு இருப்பதால் தனக்கு பெற்றோர்கள் உறவினர் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தீபிகாவை அழைத்தபோது நிகழ்ச்சிக்கு வரவில்லை எனக்கூறிவிட்டு வீட்டிலேயே இருந்தார். இதையடுத்து வீட்டில் படித்துக்கொண்டிருந்த தீபிகா, குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை குடிப்பதற்காக எடுத்துள்ளார். அப்போது பலத்த சத்தத்துடன் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறியது.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கும் தீபிகா பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது வீடு முழுவதும் கரும் புகையுடன் தீபிகாவின் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் தீபிகாவின் சடலத்தை கைப்பற்றி அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். குளிர்சாதனப்பெட்டி வெடித்துச்சிதறியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments