நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த குஷ்வாஹா, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியின் தலைவராக உள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சிக்கு 2 தொகுதிகளை மட்டுமே வழங்க முடியும் என பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் கூறியதை அடுத்து, குஷ்வாஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
0 Comments