மாணவர் சேர்க்கைக்கு ஆதார் என்னை கேட்க கூடாது என பள்ளிகளுக்கு ஆதார் எண் வழங்கும் தனிப்பட்ட அடையாள ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்கம் கொண்ட ஆதார் எண் வழங்கும் திட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உத்தரவிட்டிருந்தது . எனினும் வங்கி கணக்குகள், செல் போன் இணைப்புகள் , பள்ளி மாணவர் சேர்க்கை போன்றவற்றுக்கு ஆதார் என்னை கேட்க கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக ஆதார் என்ன கேட்கப்படுவதாக செய்திகள் வெளியாகின, இதை தொடர்ந்து ஆதார் எண் இல்லை என்பதற்காக மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்க்க கூடாது என ஆதார் என்னை வழங்கும் தனிப்பட்ட அடையாள ஆணையம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த ஆணையத்தின் தலைமை செயலதிகாரி அஜய் பூஷன் பாண்டே, பள்ளி மாணவர் சேர்க்கைக்கு ஆதார் என்னை கேட்க கூடாது என்று தெரிவித்தார் .பள்ளிகளில் சேர்த்த பின்னர் சிறப்பு முகாம்களை நடத்தி மாணவர்களுக்கு ஆதார் எண் கிடைப்பதை உறுதி செய்யலாம் என அவர் தெரிவித்துளார் .
ஆதார் எண் இல்லை என்பதிற்காக மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பு என்று அஜய் பூஷன் தெரிவித்தார்
0 Comments