Tamil Sanjikai

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 79. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்பரசு 3 முறை காங்கிரஸ் கட்சியின் எம்பியாக இருந்துள்ளார்.

அன்பரசு காலமானார் என்ற செய்தியை கேட்டு காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரின் இறுதிச்சடங்கு சென்னையில் நாளை நடைபெறுகிறது.

0 Comments

Write A Comment