Tamil Sanjikai

கடந்த சனிகிழமை இந்தோனெசியாவின் சும்த்ரா மற்றும் ஜாவா தீவுகளை சுனாமி பேரலைகள் தாக்கின. அனாக் கிரக்கடாவ் என்ற எரிமலை வெடிப்பும் அதை தொடர்ந்து கடலுக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவும் இந்த சுனாமி பேரலைகள் ஏற்பட காரணமாக கூறப்படுகிறது. சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு இடைப்பட்ட சுந்தா ஜலசந்தியில் உள்ள எரிமலை கடந்த பல மாதங்களாக எரிமலை குழம்ம்புகளையும் சாம்பலையும் உமிழ்ந்து கொண்டே இருந்துள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி சரியாக 9.30 மணிக்கு இந்த எரிமலையின் ஒரு பகுதி திடீரென பெயர்ந்து கடலுக்குள் விழுந்துள்ளது. இதன் காரணமாக கடலுக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இந்த சுனாமி பேரலைகள் எழுந்திருக்கலாம் என நிபுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சுனாமி பேரலைகளால் ஜாவா மற்றும் சும்த்ரா தீவுகளில் உள்ள பல கட்டிடங்கள் தரைமட்டமானதுடன், மரங்கள் மற்றும் பல வாகனங்களும் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டன. குறிப்பாக ஜாவா தீவின் மேற்கு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற டஜங் லீசங் கடற்கரை சுற்றுலா நகரம் உருக்குலைந்து போகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் இதுவரை 280 பேர் இறந்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிட்சை பெற்று வருவதாகவும் ஏராளமானவர்களை காணவில்லை என்றும், இந்தோனெசியாவின் அரசு துறைகள் தெரிவித்துள்ளன. பேரிடர்களுக்கு பெயர்போன இந்தோனெசியாவில் கிருஸ்துமஸ் விடுமுறை காலமான தற்போது ஏற்பட்டுள்ள இந்த சுனாமி, கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம்தேதி பேரழிவுகளை ஏற்படுத்திய சுனாமி போரலைகளை நினைவு கூறுவதாக அமைந்துள்ளது.

0 Comments

Write A Comment