சமீபத்தில் ஹைதராபாத்தில் இருந்து கவுஹாத்தி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் திடிரென விமானத்தின் கதவை திறக்க முற்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி அமரவைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தால், விமானம் அவசர அவசரமாக புவனேஸ்வரில் தரையிறக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அந்த பயணி 20 வயதான இர்ஷாத் அலி என்பது, தனது தாயார் இறந்த செய்தி கேட்டு மன தளவில் பாதிக்கப்பட்டிருந்த இர்ஷாத் அலி விமானத்திலிருந்து குதிக்க முற்பட்டதும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னர் பெண் பயணி ஒருவர் கழிவரை என நினைத்து, பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments