ஆணி படுக்கையில் 1 மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்து சென்னையைச் சேர்ந்த மாணவி புதிய சாதனையை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
யோகாசனம் பயின்று உடல்நலத்தையும், உள்ளத்தையும் பேணும் இளையோர் முதல் முதியோர் வரையிலானவர்கள், தாங்கள் பயின்ற ஆசனங்களைக்கொண்டு பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர். அந்தவகையில் 6 ஆண்டுகளுக்கு மேலாக யோகாசனம் பயின்றுவரும் சென்னையைச் சேர்ந்த உத்ராஸ்ரீ என்ற 12ம்வகுப்பு நிறைவுசெய்த மாணவி இன்று தான் பயின்ற யோகாசனத்தில் சாதனை படைக்கும் நோக்கில், ஆணிகள் பதிக்கப்பட்ட ஆணிபடுக்கையில், பத்மாசனத்தில் 1 மணிநேரம் தியானத்தில் அமர்ந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சாதனை புத்தக நிர்வாகிகள், பொதுமக்கள், சர்வதேச பண்பாட்டு மற்றும் யோகாசன அகாடமி நிர்வாகிகள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையினை பதஞ்சலி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்ததுடன், மாணவிக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கலந்துக்கொண்ட பலரும் சாதனை மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
0 Comments