பாகிஸ்தானை தாண்டிச் சென்று ஈரானுடனான தொழில் வர்த்தகத்தை மேம்படுத்த ஈரானின் சாபஹர் துறைமுகத்தை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
இதற்காக இந்திய அரசால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவிடம் ஈரான் அதிகாரிகள் துறைமுகத்தின் பொறுப்புகளை ஒப்படைத்தனர். பாகிஸ்தான் எல்லையைத் தொடாமலே கடல்வழியாக ஆப்கானுக்கு இந்திய கப்பல்கள் செல்ல இது வழியை ஏற்படுத்தும்.
யூரியா, மெத்தனால், தார், இரும்பு, ரசாயனங்கள் உள்ளிட்ட பொருட்களை ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கூடுதல் கட்டணமின்றி இந்தப் பாதை வழியாக ஏற்றுமதி செய்யவும், பதிலுக்கு இந்தியாவில் இருந்து அரிசி, தேயிலை, கார்பன், காகிதம், அலுமினியம் ஆக்சைட், மருந்துகள் போன்றவை ஈரானுக்கு அனுப்பி வைக்கவும் இது வழிவகுக்கும்.
0 Comments