Tamil Sanjikai

இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியில் 15-ஆவது வீரராக ஆர்ச்சி ஷில்லர் என்கின்ற 7 வயது சிறுவன் சேர்க்கப்பட்டுள்ள சுவாரஸ்யம் நிகழ்ந்துள்ளது.

சுழற்பந்து வீச்சாளரானஆர்ச்சி ஷில்லர் (Archie Schiller) என்ற சிறுவன் அடிலெய்ட் டெஸ்ட்டிற்கு முன்னதாக இந்தியாவுடன் நடந்த பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்றுள்ளார். அப்போதே 3-ஆவது டெஸ்ட்டில் Archie Schiller 15-ஆவது வீரராக சேர்க்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதமே ஆஸ்திரேலிய அணியில் இடமளிக்கப்படும் என ஆர்ச்சி ஷில்லரிடம் தெரிக்கப்பட்ட போது, விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பதே தனது குறிக்கோள் என அவர் தெரிவித்திருந்தார் . இதயத்தில் உள்ள பாதிப்பால் இதுவரை 13 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட Archie Schiller-க்கு ஆயுட்காலம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்ற நிலை உள்ளது.

கிரிக்கெட் மீது அவருக்கு உள்ள தீரா காதலை புரிந்துகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழு, மெல்ஃபோர்ன் டெஸ்ட்டில் அவரை இணை கேப்டனாகவும் நியமித்துள்ளது.

0 Comments

Write A Comment