தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு பேட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க தலைவராக இருந்த பாரதிராஜா பதவியில் இருந்து விலக்கியதையடுத்து, சென்னையில் இன்று இயக்குநர் சங்கத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, வித்யாசாகர் ஆகியோர் போட்டியிட்டனர்.
மொத்தம் 1503 வாக்குகள் பதிவாகிய நிலையில், ஆர்.கே.செல்வமணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகரை விட 1,386 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
0 Comments