Tamil Sanjikai

இந்தியாவில் இனி சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு இனி மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை பெறத் தேவையில்லை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நச்சுக்கழிவுகளை வாயுவாகவோ, திரவமாகவோ அல்லது திடப்பொருளாக வெளியேற்றும் ஆலைகள், அனல்மின் நிலையங்கள் மற்றும் அணு உலைகள் அமைப்பதற்கு, மத்திய மாநில சுற்றுச்சூழல் துறையுடன் சேர்த்து மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியையும் பெற வேண்டும் என்ற சட்டவிதிமுறை இருந்து வருகிறது. ஆனால் இதனை மாற்றியமைத்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி சுற்றுச்சூழல் அனுமதி கேட்கும் நிறுவனங்கள் அனைத்தும், தனியாக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெறத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல்துறையின் அனுமதியை பெற்றால் போதுமானது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கடிதம் மூலம் அனைத்து மாநில அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்துறை அனுமதி பெற்ற பின்னரும் கூட, நியூட்ரினோ போன்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்வடிவம் பெறாமல் இருப்பதற்கான காரணம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரமே. அத்தகைய மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலே இனி தேவையில்லை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருப்பது, மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் செயல் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment