ஹூவாய் தொலைத்தொடர்பு நிறுவன அதிபரின் மகள் கைது பின்னணியில் ரகசிய உளவு, வர்த்தக போர் உள்ளிட்டவை இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாயின் அதிபரின் மகளும் ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கடந்த 1-ஆம் தேதி கனடாவின் வான்குவார் நகரில் கைது செய்யப்பட்டார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் அங்கு அமெரிக்க தயாரிப்புகளை சந்தைபடுத்தினார் என்பது மெங் வான் ஜவ் மீதான புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் இதனை மறைத்து அமெரிக்க வங்கியில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹூவாய் நிறுவனம் சீன அரசுக்கு ஆதரவாக உளவு வேலையில் ஈடுபடுவதாகவும் அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் குற்றச்சாட்டுகள் எழுப்பியுள்ளன. இதனை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. சீன நிறுவனங்கள் உலகசந்தையில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க இது அமெரிக்காவின் சதி என்று சீன அரசு புகார் தெரிவித்துள்ளது.
மென்வாங்ஜவ் எந்த நாட்டின் சட்டதிட்டங்களையும் மீறவில்லை என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது சீனாவின் கோரிக்கை. இதனிடையே மென்வாங்ஜவ்வை நாடு கடத்துவது தொடர்பாக வான்குவர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் முடிவு எட்டப்படவில்லை. இந்த வழக்கு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வர உள்ளது. இந்த விவகாரத்தில் சீனா, அமெரிக்கா, இடையே மோதல் வலுப்பதால் அண்மையில் இருநாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்படிக்கயைில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவிக் கொண்டிருக்கிறது.
0 Comments