Tamil Sanjikai

கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அஜித் இணைந்து பணியாற்றிய தக்‌ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.

சில மாதங்களாக துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் அஜித் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இந்நிலையில் கடந்த 28ம் தேதி கோவையில் தொடங்கி மாநில ரைபிள் சாம்பியன்ஷிப் போட்டியில் (State Rifle Championship 2019) அஜித்குமார் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி சென்னை ரைபிள் கிளப் சார்பில் அஜித்குமார் 25 மீட்டர் பிரிவில் பங்கேற்றார். இதனையடுத்து அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் நடிகர் அஜித்துக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித் கலந்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித்குமாரின் வருகையை அடுத்து துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெறும் பகுதியில் வழக்கத்தை விட அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

0 Comments

Write A Comment