இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் மாருதி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எர்டிகா முந்தைய மாடல்களைவிட நீளமாகவும், அகலமாகவும், எடை குறைவாகவும் இருக்கிறது. ஒட்டுமொத்த எர்டிகா கார் 4,395எம்.எம். நீளமாகவும், 1,735 எம்.எம். அகலமாகவும், 1,690 எம்.எம். உயரமாகவும் இருக்கிறது.
முற்றிலும் புதிய வடிவமைப்புடன், முந்தைய மாடல்களை விட அதிக உபகரணங்களை கொண்டுள்ளது. காரின் முன்பக்கம் ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், கிரில் டிசைன், ஸ்போர்ட் பம்ப்பர்கள், ஃபாக் லேம்ப்களும், பக்கவாட்டில் 16-இன்ச் அலாய் வீல்கள், ஸ்விஃப்ட் மாடலில் உள்ளதை போன்றே கோடுகள் இடம் பெற்றிருக்கிறது. காரின் பின்புறம் ராப்-அரவுன்ட் டெயில் லைட்களுடன் கார் முழுக்க முந்தைய மாடல்களை விட அதிக பிரீமியம் தோற்றம் பெற்று இருக்கிறது. உள்புறம் பிரீமியம் தரத்தில் டூயல்-டோன் இன்டீரியர்கள், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய மாருதி எர்டிகா மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்கள்: 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் முன்னதாக மேம்படுத்தப்பட்ட சியாஸ் செடான் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது. புதிய பெட்ரோல் என்ஜின் 1.3 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டீசல் என்ஜின் 1.3 லிட்டர் DDiS யூனிட் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை மாருதி எர்டிகா மாடலில் ஏர்பேக், ஏ.பி.எஸ்., ரிவர்ஸ் பார்க்கிங் கேமராக்கள், ஸ்பீட் அலெர்ட்கள், சீட்-பெல்ட் ரிமைன்டர் மற்றும் ஐசோஃபிக்ஸ் சைல்டு-சீட் மவுன்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய எர்டிகா எம்.பி.வி. மாடல் புதிய பியல் மெட்டாலிக் ஆபன் ரெட், மெட்டாலிக் மேக்மா கிரே, பியல் மெட்டாலிக் ஆக்ஸ்ஃபோர்டு புளு, பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் மெட்டாலிக் சில்க்கி கிரே என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை ரூபாய் .7.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மாருதி எர்டிகா காருக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கியது. பத்து வேரியன்ட்களில் கிடைக்கும் புதிய எர்டிகா டாப் என்ட் வேரியன்ட் விலை ரூ.10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
0 Comments