Tamil Sanjikai

கோவாவில் தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென ஆளுநருக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

40 தொகுதிகள் கொண்ட கோவாவில், முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது, பாஜக 11 இடங்களையும் கொண்டுள்ளது. கோவா மாநில கட்சிகளான மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி 3 இடங்களையும், கோவா பார்வேர்ட் கட்சி 3 இடங்களையும், சுயேட்சைகள் மூன்று இடங்களை கொண்டு இருக்கிறார்கள். தேசியவாத காங்கிரஸிடம் ஒரு இடம் உள்ளது. மனோகர் பாரிக்கர் முதல்வராக இருந்ததன் அடிப்படையில் கூட்டணி கட்சிகள் பாஜக அரசிற்கு ஆதரவு அளித்துவந்த நிலையில், பாரிக்கரின் மறைவு காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் தனிப்பெரும்பான்மை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரி கோவா ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது. கூட்டணி கட்சியினர் பாஜகவிடம் முதல்வர் பதவியை கோரிவரும் நிலையில், இன்று முதல்வரின் பதவியேற்பு நடைபெறுமென்றும் கூறப்படுவதால் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

0 Comments

Write A Comment