அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என்றும், அதில் எள்ளளவும் மாற்றமில்லை என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்,தமிழ்நாட்டில், இந்தி ஒருபோதும் திணிக்கப்பட மாட்டது என்றும் உறுதியளித்திருக்கிறார். இங்கு, இருமொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என சட்டப்பேரவையில், தீர்மானம் இயற்றப்பட்டிருப்பதையும், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
புதிய பாடத்திட்டங்களை முழுமையாக முடித்து, மாணவ, மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றால், வார விடுமுறை நாட்கள் தவிர, 210 நாட்கள், பள்ளிகள் இயங்க வேண்டிய அவசியமாகிறது என்றார்.
மாணவர் நலன் கருதியே, திங்கட்கிழமையன்று பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு, பெற்றோரும், ஆசிரியர்களும் முழுமையாக ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
0 Comments