நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையடுத்து தீவிர பிரச்சார பணியில் ஈடுபட்டிருக்கும் பா.ஜ.க வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், பிரச்சாரத்திற்காக நேற்று காலை தனது வீட்டிலிருந்து காரில் வில்லுக்குறி பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது வில்லுக்குறி சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மத்திய அமைச்சர் பிரச்சாரத்திற்கு வருவதை அறிந்த அதிகாரிகள் அவரது காரை நிறுத்தி, மத்திய மந்திரி என்று கூட பாராமல் சோதனை நடத்தினர்.
அவரிடம் பிரச்சார வாகனத்துக்கான அனுமதி கடிதம் உள்ளிட்ட வாங்கிய சோதனை செய்த அதிகாரிகள், காரின் டிக்கி, மற்றொரு காரையும் சோதனை செய்தனர். மத்திய அமைச்சர் என்றுகூட பாராமல் அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை 15 நிமிடம் நீட்டித்தது. சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
0 Comments