Tamil Sanjikai

வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் இந்தியாவை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடியின் சிறை காவலை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மீது பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.280 கோடி மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தது. இதனிடையில், நாட்டை விட்டு ஓடிய நிரவ் மோடியின் சொத்து மற்றும் ஆவணங்களை கைப்பற்றி, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது சிபிஜ மற்றும் மத்திய அமலாக்கத்துறை.

இதை தொடர்ந்து, அவர் லண்டனில் இருப்பதாக கிடைத்த செய்தியை வைத்து அவரை நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அரசின் கோரிக்கையை ஏற்ற லண்டன் அரசு அவரை கைது செய்து, வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, வீடியோ கான்ஃபரென்ஸ் மூலம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார் நிரவ்.

இதை தொடர்ந்து அவரது காவலை வருகிற நவம்பர் மாதம் 11ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி நினா டெம்ப்பியா.

0 Comments

Write A Comment