சென்னை காசிமேடு மீனவர்கள் வலையில் 1 டன் எடையுள்ள ராட்சத கோட்டான் திருக்கை மீன் சிக்கியது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நான்குபேர் கடந்த இருதினங்களுக்கு முன் மீன்பிடிக்கச் கடலுக்குள் சென்றனர் திருவான்மியூர் அருகே 80 மீட்டர் ஆழத்தில் மீனவர்கள் வீசிய வலையில், கோட்டான் திருக்கை என்ற ஒரு டன் எடையுள்ள ராட்சத திருக்கை மீன் சிக்கியது. சக மீனவர்களின் துணைகொண்டு அதனை கரைக்கு கொண்ட வந்த அவர்கள் மீனை வெட்டி பதப்படுத்தி ஏற்றுமதி செய்தனர்.
0 Comments