வங்கி மோசடி வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நிரவ் மோடி, வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற உள்ள விசாரணையின் போது ஜாமீன் கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே அவர் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் நிரவ் மோடி சார்பில் ஜாமீன் மனுவைத் மீண்டும் தாக்கல் செய்ய உள்ளதாக அவருடைய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.எத்தகைய கடுமையான நிபந்தனைகளையும் ஏற்கத் தயார் என்றும் 5 லட்சம் பவுண்டு பிணைத் தொகையாக செலுத்தத் தயார் என்றும் நீரவ் மோடி தரப்பில் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரவ் மோடி தமக்காக வாதாட பெரும் பொருட்செலவில் மிகப்பெரிய சட்டக் குழுவை நியமனம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
0 Comments