குஜராத்தின் கட்ச் பகுதியில் கடல் வழியாக சிறிய படகுகள் மூலம் பயங்கரவாதிகள் அல்லது பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் நம் நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, கண்டலா துறைமுகம் மற்றும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, சுமார் 290 கி.மீ., தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், கஸ்நாவி என பெயரிடப்பட்ட ஏவுகணை பயிற்சி நடந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவ படை தளபதி ஆசிப் கஃபூர் தகவல் தெரிவித்துள்ளார்.
0 Comments