2019 ஜனவரி முதல் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக நோக்கியா நிறுவனத்தின் அனுபவமிக்க செயல் அதிகாரி ஆசிஷ் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிஷ் சவுத்ரி ,நோக்கியாவில் 15 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வருபவர் . வாடிக்கையாளர் செயற்பாட்டு தலைமை அதிகாரியாக உள்ள ஆசிஷ் சவுத்ரி, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் இவர் ஆப்பிள் நிறுவனத்தில் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை நோக்கியா நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதியுடன் ஆசிஷ் சவுத்ரி நோக்கியாவில் இருந்து விலகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments