Tamil Sanjikai

இந்தியாவில் முதல்முறையாக ஹௌராவிற்கும், புதுடில்லிக்கும் இடையே இஞ்சினில்லாமல் இயங்கக் கூடிய ரயிலை இந்திய ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது. இம்மாதிரியான ரயில் இந்தியாவில் இதுவே முதன்முறையாக அறிமுகமாகி உள்ளது. இந்த ரயிலுக்கு ரயில்-18 என பெயரிடப்பட்டுள்ளது.

இஞ்சினற்ற, ஸெல்ப் ப்ரொபெல்ட்டு வகையிலான இந்த ரயில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. 16 ஏ.சி பெட்டிகள் உள்ள இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. இந்த ரயிலில் ஹௌராவிலிருந்து புதுடில்லிக்குச் (1400 கி.மீ) 12மணிநேரங்களில் சென்றுவிடலாம். இதுவே ராஜ்தானி எஸ்பிரஸில் ஹௌராவிலிருந்து புதுடில்லி சென்றடைய 16 மணிநேரம் ஆகும்.

சென்னையில் உள்ள ஐ.சி.எப்பில் இருந்து இன்று (29.10.2018) தொடங்கி இன்னும் ஐந்து நாட்களுக்கு இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இந்த ரயிலின் பிரேக், குளிர்சாதனம் மற்றும் இதர வசதிகள் நன்றாக செயல்படுகிறதா என்று கண்டறியவும், இதன் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பத்தை ஊழியர்களுக்கு பரிச்சயமடையச் செய்வதே இந்த சோதனை ஓட்டத்தின் நோக்கமாகும்.

ரயிலின் 18-ன் சிறப்பம்சங்கள்:

இந்த ரயிலின் மொத்த 16 பெட்டிகளிலும் ஏ.சி வசதி, வசதியான இருக்கைகள், வைஃபை, தானியங்கி கதவுகள், பயோ - வேக்கம் மற்றும் தொடுதல் வசதியுடனான கழிவறைகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் மூலம் பயணிகள் தகவல் அறியும் சிஸ்டம் உள்ளன.

மொத்தம் 16 பெட்டிகளாக, சேர் கார் வகையிலான பெட்டிகள் இருக்கின்றன. அதில் 2 எக்சிகியூடிவ் சேர் கார், 14 எக்சிகியூடிவ் அல்லாத சேர் கார் பெட்டிகள் அடங்கும். எக்சிகியூடிவ் பெட்டியில் 56 பயணிகளும், எக்சிகியூடிவ் அல்லாத பெட்டியில் 78 பயணிகளும் அமரலாம்.

இந்த சோதனை ஓட்டம் நிறைவு பெற்றபின் பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

0 Comments

Write A Comment