Tamil Sanjikai

நிலவின் தென்துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த வேலையை, செய்வதற்காக ரூ.1,000 கோடியில் இந்தியாவின் ‘சந்திரயான்-2’ விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15-ம்தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ‘கவுண்ட்டவுனும்’ நடந்து வந்தது. ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறின் காரணமாக கடைசி நிமிடத்தில் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஏவுவது நிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்-2 விண்கலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன்-2 வெற்றி அடைந்தால், அறிவியல்ரீதியிலான பல சோதனைகள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment