காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள பாராளுமன்ற மைய அறையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் 52 மக்களவை எம்.பி.க்களுடன், மாநிலங்களவை எம்.பி.க்களும் பங்கேற்றனர். அவர்களுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்புக்கு சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். இதையடுத்து, சோனியா காந்தி நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளுக்குமான காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களுக்கு சோனியா காந்தி தலைவராக இருப்பார்.
0 Comments