நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
பொது சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 வரை அபராதம் விதிகப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை வரவேற்கும் விதமாக உள்ளது.
0 Comments