மகாராஷ்டிராவில் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று, மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தபின் சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மேலும், அண்மையில் பெய்த மழையால் சேதமடைந்த விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உதவி வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம் என்றும், இதுதொடர்பாக, அவரே மத்திய அரசிடம் நேரடியாக பேசுவதாக எங்களுக்கு உறுதியளித்துள்ளார் எனவும் ஆதித்யா தாக்கரே கூறினார்.
ஆளுநர் உடனான சந்திப்பின்போது சிவசேனா கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே, ராம்தாஸ் கடம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 Comments