புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதிகொண்ட விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலையடுத்த குளத்தூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் டயர் எதிர்பாராத விதமாக வெடித்ததால்,நிலைகுலைந்து எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தின் காரணமாக, ஒன்றன்பின் ஒன்றாக வந்த ஏழு கார்கள் சங்கிலித் தொடர்போல் மோதின. இந்த விபத்தில் குளத்தூர் பகுதியை சேர்ந்த சிதம்பரம் மற்றும் ரங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமுற்று அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 10க்கும் மேற்பட்டோரில், மூவர் உயிரிழந்துள்ளனர். படுகாயமுற்றவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
0 Comments