ஐ.டி. ஊழியர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கானத்தூர் காவல் நிலைய காவலர்களுக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது..
ஐ.டி. ஊழியர்களான கார்த்திக், யஷ்வந்த் ஆகியோரை தாக்கி, 2000 ரூபாயை கானத்தூர் காவல் நிலைய காவலர்கள் பாலசுப்ரமணியன், தணிகாசலம் ஆகியோர் பறித்ததாக வெளியான செய்தியின் அடிப்படையில் அதுகுறித்து விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்துள்ளது.
மேலும் இதுகுறித்து காவலர்கள் மீது இதுவரை ஏன் வழிப்பறி வழக்கு பதிவு செய்யவில்லை எனவும், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கானத்தூர் காவல் ஆய்வாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் 4 வாரத்தில் தென் மண்டல இணை ஆணையர், அடையார் துணை காவல் ஆணையர் ஆகியோர் விளக்கமளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணைய நீதித்துறை உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments