Tamil Sanjikai

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ரூ.8 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கிறது. மேலும் நிலவி வரும் கடும் நிதி நெருக்கடியின் காரணமாக அனைத்து விமான சேவைகளையும் அந்த நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லியும், சிவில் விமான போக்குவரத்து ராஜாங்க மந்திரி ஜெயந்த் சின்காவும் தான் காரணம் என பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறி உள்ளார்.

அவர்கள் இருவரும் தங்கள் பதவிகளை தவறாக பயன்படுத்தி பாரதீய ஜனதா கட்சியின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு பார்சல் செய்து கொடுக்கும் வேலையை செய்ய வேண்டாம் என அருண் ஜெட்லிக்கும், ஜெயந்த் சின்காவுக்கும் நரேந்திர மோடி கூற வேண்டும் என்றும் சுப்பிரமணிய சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையொட்டி அவர் சிவில் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ் பிரபுவுக்கும் அவர் ஒரு கடிதமும் எழுதி உள்ளார்.

இந்த தகவல்களை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment