காஷ்மீர் மாநிலம் ரம்பான் மாவட்டத்தில் உள்ள கூல் பகுதியில் ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், ராணுவத்தினருடன் சென்று அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஹரா பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ரூ.1½ கோடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களுக்கும் பயங்கரவாத கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments