சென்னை அமைந்தகரையில் உள்ள விடுதி ஒன்றில் 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு பெண்ணை கடத்தி அறையில் அடைத்து வைத்து தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் டைலர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த திலகவேணி, கடந்த 2012 -ஆம் ஆண்டு சகாயராணி என்பவரிடமிருந்து தற்போது வசித்துவரும் வீட்டை 50 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி 35 லட்ச ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளார். மீதப் பணத்தை 2 ஆண்டுகளுக்குள் கொடுத்துவிடுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், தற்போது வரை 5 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மீதமுள்ள 10 லட்ச ரூபாயை சகாயராணி தரப்பு பலமுறை கேட்டும் திலகவேணி நாட்களை கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சகாயராணியின் கணவர் தாஸ், திலகவேணியை காரில் கடத்திச் சென்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் விடுதி அறை ஒன்றில் அடைத்து வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
அங்கிருந்து தப்பித்த திலகவேணி நீலாங்கரை காவல்நிலையத்தில் புகாரளித்தார். கடத்தல் சம்பவம் அமைந்தகரை பகுதியில் அரங்கேறியதால், அங்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0 Comments