ஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணின் முகத்தில் ஆக்டோபஸ் ஒட்டிக்கொண்டு கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவை சேர்ந்த உணவு தொடர்பான vlog ஒன்றை நடத்தி வரும் பெண் ஒருவர் வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு அதன் வீடியோவை seaside girl Little Seven’ என்ற பெயரில் "வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் நேரலை வீடியோ ஒன்றில் ஆக்டோபசை உயிருடன் சாப்பிட உள்ளதாக கூறுகிறார். அதனைத்தொடர்ந்து அவர் அதனை சாப்பிட முயல்கிறார், அப்போது அவரின் முகத்தில் ஆக்டோபஸ் படர்ந்து கொண்டு கடிக்க தொடங்குகிறது.வலியால் அந்த பெண் கதர் துடிக்கிறார், சில நிமிட போராட்டத்திற்கு பின் ஆக்டோபசை முகத்தில் இருந்து அந்த பெண் நீக்கிய போது, அவரது கன்னத்தில் காயம் ஏற்பட்டது.
0 Comments