மாநிலங்களவை இன்று காலை கூடியதும், மேகதாது அணை விவகாரத்தை முன் வைத்து தமிழக ஆளும் கட்சியும், எதிர்கட்சியுமான அதிமுக மற்றும் திமுகவின் எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியதும், தொடர் அமளி நீடித்தது.
முத்தலாக் மசோதாவை தற்போதைய நிலையில், ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும், பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதை அடுத்து எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியில் ஈடுபட்டனர் எனவே இன்று முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் மாநிலங்களவை ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
0 Comments