சென்னை, நந்தனம் அருகே ஒரே பைக்கில் மூன்று பெண்கள் வந்து கொண்டு இருந்தனர். அப்போது மாநகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பேருந்துக்கும், இருசக்கர வாகனத்துக்கும் இடையே பெண்கள் ஓட்டி வந்த வாகனம் நடுவில் வந்ததால் இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது.
இந்த விபத்தில் பவானி, நாகலட்சுமி ஆகியா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திராவை சேர்ந்த மகாலட்சுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் சிக்கிய மாநகரப் பேருந்தை இயக்கி வந்த பேருந்து ஓட்டுநர் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து நடந்தது சென்னையின் முக்கியப் பகுதி என்பதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
0 Comments