சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில்' மோடியை கட்டித் தழுவியது ஏன்?" என மாணவியின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல்காந்தி,
அன்பின் அடையாளமாகவே பிரதமர் மோடியை கட்டித் தழுவினேன். என் குடும்பத்தை பிரதமர் மோடி எப்போதும் திட்டுவார், ஆனால் அவர் மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு.
அரசியலை எனக்கு கற்றுக்கொடுத்ததால் மோடி மீது அன்பு ஏற்பட்டது. அன்பின் மூலம் கோபத்தை அடக்குவது எனது குணம் மட்டுமல்ல, நாட்டின் குணம், தமிழர்களின் குணம் என்றார்.
என் தாய் சோனியாவிடம் இருந்து பணிவை கற்றுக் கொண்டேன். பாலின சமத்துவத்தில் வடமாநிலங்களை காட்டிலும், தென் மாநிலங்கள் சிறந்த அளவில் உள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே வரி இருக்கும். அதுவும் குறைந்த வரியாக இருக்கும். ஜிஎஸ்டியால் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு ராகுல்காந்தி பொறுமையாக பதில் அளித்தார்.
0 Comments