Tamil Sanjikai

ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிகளை மதிக்காமல், விதிமீறல்களில் ஈடுபட்டவர்களையும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தடுத்து நிறுத்தி எச்சரிக்கும் பணிகளை மேற்கொண்டார்.

புதுச்சேரியில் இன்று முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் இந்திரா காந்தி சதுக்கம் அருகே போக்குவரத்துக் காவலர்களுடன் இணைந்து கிரண் பேடி வாகன சோதனையில் ஈடுபட்டார். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை கேள்வி எழுப்பிய அவர், பிற விதிமீறல்களில் ஈடுபட்டவர்களையும் தடுத்து மடக்கிப் பிடித்துக் கண்டித்தார்.

இதனிடையே புதுச்சேரியில் காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் நடைபெற்றது

ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தும், அறிவுரை கூறியும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

0 Comments

Write A Comment