இரண்டாவது முறையாக அண்மையில் பதவியேற்ற வெனிஸுவேலா நாட்டு அதிபராக நிக்கோலஸ் மதுரோ. ஆனால் தேர்தலில் முறைகேடு செய்து தான் அவர் வெற்றிபெற்றார், அதனால் தேர்தலை மீண்டும் நடத்துமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் வெனிஸுவேலாவின் அதிபராக தன்னை அறிவித்துக் கொண்ட ஜூவான் கெய்டோவை ((Juan Guaido)) அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.
நிக்கோலஸ் மதுரோவிற்கு எதிராக போராட்டங்களும் வலுத்துள்ள நிலையில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜூவான் கெய்டோ, வெனிசுலாவின் அதிபராக தன்னை தானே அறிவித்துக் கொண்டார்.
இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கீகரித்துள்ளதுடன், வெனிசுலா ஜனநாயகத்தைக் காக்க அமெரிக்கா தனது முழு பலத்தையும் பயன்படுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments