கடந்த சில ஆண்டுகளாகவே இணையதள வாடிக்கையாளர்களை பீதியில் ஆழ்த்தியிருக்கும் விஷயமாக இருப்பது data theft எனப்படும் தகவல் திருட்டு ஆகும். சமூக வலைதள நிறுவனங்களும், பல்வேறு நாடுகளின் அரசுகளும் இதை மறுத்தாலும் கூட தகவல்கள் திருடபடுவதுதான் நிதர்சனம். இந்த விஷயம் நமக்குத் தெரிந்திருந்தாலும் கூட இது அத்தனை சாமானியமான பிரச்சினையல்ல...
மக்களிடையே எழுந்துள்ள இந்த அச்சத்தைப் போக்கவும் , அதிகரித்து வரும் இணைய தள தகவல் திருட்டை ஹேக்கர்கள் எனப்படும் திருடர்களிடமிருந்து தடுத்து நிறுத்தவும் ICANN எனப்படும் இண்டர்நெட் கார்ப்பொரேஷன் ஆப் அசைண்டு நெய்ம்ஸ் அண்ட் நம்பர்ஸ்(ICANN ) இணையதள டொமைன் அனைத்தின் கிரிப்டோகிராபிக் கீயையும் மேம்படுத்த(update ) முடிவெடுத்து அதற்கான பணிகளையும் தொடங்கி விட்டனர். இதன் காரணமாக உலகில் உள்ள சிலபல இடங்களில் ஒரு சில இணையதளங்கள் வேலை செய்யாமலும், வேகம் குறைந்தும், ஒரு சில பக்கங்கள் மட்டும் இந்த பராமரிப்பு பணி முடியும் வரை உபயோகப் படுத்த முடியாமலும் போகலாம்.
விரிவான பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் வேலைகள் முழுமையாக முடிவடைந்து மீண்டும் சீரான நிலைக்கு மீண்டுவர 48 மணிநேரங்கள் வரை ஆகலாம் எனத் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே இணையதள வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, பராமரிப்பு பணி முடிந்தவுடன் இணையதள சேவை இயல்பு நிலை திரும்பும்.
0 Comments