தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சிறப்பு வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் , " செப்டம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை சிறப்பு வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், இந்த சரிபார்ப்பு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வாக்காளரும் அவருடைய வாக்காளர் அடையாள அட்டைகளில் உள்ள பிழைகளை திருத்தி கொள்ளவும், பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவற்றையும் மாற்றிக்கொள்ளவும் முடியும் என தெரிவித்தார்.
நவ.2,3,9,10 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், வாக்காளர்கள் www.nvsp.in என்ற இணையதளத்திலும் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.
0 Comments