Tamil Sanjikai

இந்திய ராணுவத்தினரின் சீருடைகளுக்கு தைப்பதற்காக முன்னதாக காட்டன் துணிகளை பயன்படுத்தி வந்தனர். காட்டன் துணிகளை பராமரிப்பது சிரமமாக இருந்ததால் அதை மாற்றி டெர்ரிகோட் துணியாலான சீருடைகள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த துணிவகைகள் கோடை காலத்திலும், ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போதும் பொருந்துவதில்லை என்று கூறப்படுகிறது.

எனவே போர் சூழல் மற்றும் வானிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ராணுவ உடை மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீருடையின் நிறம், சீருடையில் பதவியை குறிக்கும் பட்டைகள் இருக்கும் இடம் பின்றவற்றில் சில மாற்றங்கள் வர உள்ளதாக தெரிகிறது.

0 Comments

Write A Comment