Tamil Sanjikai

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயது பெண் ஊழியர் கூறிய பாலியல் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த புகார் பற்றி விசாரிக்க நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்து உத்தரவிட்டது

இந்த குழுவின் முன்பு ஆஜராகுமாறு, புகார் கூறிய பெண் ஊழியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும் வகையில் அந்த பெண் ஊழியர் விசாரணை குழுவிற்கு எழுதிய கடிதத்தில், நீதிபதி என்.வி.ரமணா, குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்.மேலும் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்கின்றவர். இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தின் அடிப்படையில் தன்னுடைய புகாரை இந்த குழு நியாயமாக விசாரிக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்..

இதனையடுத்து, விசாரணை குழுவில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார். எனவே, அவருக்கு பதிலாக வேறொரு நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Write A Comment