இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்பிடம் இந்தியா - பாகிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், இந்தியா பாகிஸ்தானிடம் இருந்து விரைவில் நல்ல செய்தி வரக்கூடும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இருநாட்டின் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட்டு, பதற்றமான சூழலை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து தங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இரு நாட்டிற்கும் இடையேயான பதற்றம் விரைவில் தணியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
0 Comments