சிவகங்கை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றிய விவகராத்தில் கிராம நிர்வாக உதவியாளர் வெட்டிக்கொல்லப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூர் கிராம நிர்வாக உதவியாளர் ராதாகிருஷ்ணன். இவர், அங்குள்ள ஆக்கிரமிப்பு வீட்டை அகற்ற உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அகற்றியதால் வீட்டின் உரிமையாளர், ராதாகிருஷ்ணனை ஆத்திரத்தில் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments