அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நியாயமான கொள்முதல் விலை, விவசாய கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேற்று மாலையிலிருந்து தலைநகர் டெல்லி ராம்லீலா மைதாத்தில் குவிந்தனர். இந்த விவசாயிகள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்கு சென்றுள்ளனர். ராம்லீலா மைதானில் இருந்து லலித் கேட், டால்ஸ்டாய் சாலை வழியாக நாடாளுமன்றத்தை நோக்கி விவவசாயிகள் பேரணி சென்று கொண்டிருக்கிறது. குடியிருப்புப் பகுதிகள் வழியாக அவர்கள் சென்றபோது, தங்கள் வீட்டில் இருந்து வெளியே வந்த பொதுமக்கள் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்தனர். இதில் மாணவர் அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள் என பல்வேறு பிரிவு மக்களும் கலந்து கொண்டுள்ளனர். பேரணி நடக்கும் சாலைகளில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
தென் இந்தியாவை பொறுத்த வரையில் தமிழகத்தை விட, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில விவசாயிகளை அதிகமானவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இன்குலாப் மச்தூர் கேந்திராவை சேர்ந்த தொழிலாளிகள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
0 Comments