இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியின் உபரி நீரை சேமிக்க, விரைவில் மூன்று புதிய அணைகளை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிந்து நதி உடன்படிக்கையின்படி இந்தியா அதிகபட்சமாக 94 சதவீத தண்ணீரை பயன்படுத்தி வருகிறது. மீதமுள்ள ஆற்று நீர் உபரிநீராக பாகிஸ்தானுக்கு அனுப்படுகிறது. சிந்துநதி நீர் பகிர்வு ஒப்பந்தப்படி, சட்லஜ், பீஸ் மற்றும் ராவி நதிகளில் பாயும் தண்ணீர், இந்தியாவிற்கு சொந்தமானது. செனாப், ஜீலம் மற்றும் இந்தூஸ் நதிகளின் தண்ணீர் பாகிஸ்தானுக்கு சொந்தம், என இருநாடுகள் இடையே முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் உபரி நீரை தடுத்து சேமிக்கும் வகையில், 3 புதிய அணை திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் 3 அணைகள் கட்டப்பட உள்ளது. ஏற்கனவே இத்திட்டம் பரிசீலனையில் இருந்தாலும், கால தாமதம் ஆன நிலையில், தற்போது இத்திட்டத்தை விரைவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
0 Comments