Tamil Sanjikai

முன்னணி நிறுவனமான ஹார்லிக்ஸ் நிறுவனம் விரைவில் கைமாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் ஹார்லிக்ஸ் 72.5 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இது சுமார் 21,000 கோடிக்கு கைமாற உள்ளது. இதை வாங்க நெஸ்ட்லே நிறுவனம் ஆர்வம் காட்டுவதாக கூறப்பட்டது. இதுபோல், இந்தியாவில் தனது வர்த்தகத்தை நிலைப்படுத்தும் நோக்கில் யூனிலீவர் நிறுவனமும் ஆர்வம் காட்டுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் நிறுவனம் ஹார்லிக் நிறுவனத்தை விற்க முடிவு செய்ததாக கடந்த மார்ச் மாதமே தகவல் வெளியானது. பிரபல மருந்து நிறுவனமான நாவர்டீஸ் பங்குகளை வாங்க விற்பனை செய்வதாக கூறப்பட்டது. இந்த நிறுவனத்தை நெஸ்ட்லே வாங்க உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்து, விரைவில் நிறுவனம் கைமாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஹார்லிக்ஸ், ஹார்லிக்ஸ் பிஸ்கெட் மற்றும் மதர் ஹார்லிக்ஸ் ஆகியவை அடங்கும்.

1843-ஆம் ஆண்டில் வில்லியம் மற்றும் ஜேம்ஸ் ஹார்லிக்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட ஹார்லிக்ஸ் பானம் உலகம் முழுக்க பிரபலம். 2-ம் உலகப்போரின் போது மிட்டாய் மற்றும் மாத்திரைகளாக இது போர் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment