Tamil Sanjikai

துருக்கி நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிரிய எல்லை பகுதியில், வசித்து வரும், குர்தீஷ் இன மக்கள் மீது, துருக்கி ராணுவம் தாக்குதல் மேற்கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு, இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் துருக்கி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவின் ஐஎஸ் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழித்து விட்டதாகவும், அதனால், துருக்கி எல்லையில் இருக்கும் அமெரிக்க படைகளை வாபஸ் பெற உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி சிரியாவில் உள்ள ஏனைய அதிருப்தியாளர்களை துருக்கி எல்லை மீறாமல் கையாண்டு கொள்ளலாம் எனவும் எல்லை மீறினால், பின் பொருளாதார ரீதியான பெரும் இழப்பை துருக்கி சந்திக்க வேண்டியிருக்கும் என துருக்கி அரசுக்கு ஒரு எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

எனினும், ட்ரம்பின் எச்சரிக்கையும் மீறி, துருக்கி நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிரிய எல்லை பகுதியில் முகாமிட்டு செயல்பட்டு வரும் அந்நாட்டின் சிறுபான்மை இனத்தவரான குர்தீஷ் மக்கள் படையினர் மீது துருக்கி ராணுவம்தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.

துருக்கியின் இந்த செயலை, சர்வதேச நாடுகள் அனைத்தும் கடுமையாக கண்டித்து வரும் நிலையில், மனித நேயத்துடன் நடந்துக்கொள்ளுமாரும், இந்நிலை தொடர்ந்தால், வேறு விதமான பெரும் விளைவுகளை துருக்கி சந்திக்க நேரிடும் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது இந்தியா.

0 Comments

Write A Comment