Tamil Sanjikai

உலக நாடுகளின் வரிசையில் காற்றின் ஆற்றலை பயன்படுத்துவதில் இந்தியா ஐந்தாவது இடத்தை இருக்கிறது. காற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் இதில் முன்னணியில் உள்ளது. 1000 மெகாவாட் என்ற அளவில் காற்றாலைகளின் செயலாக்கத்தின் மூலம் குமரிமாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. வீசும் காற்றுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை தான். ஆனால் காற்றாலைகளின் விசிறிகளினால் சுற்றுப்புற வானிலை பாதிக்கப்படுவது கண்ணுக்குத் தெரியாது.

சங்கிலித் தொடராக அமைக்கப்பட்ட காற்றாலைகளின் சுழலும் விசிறிகள் சுற்றுப்புற காற்றை மேலும் கீழுமாக அதிர்வடையச் செய்கின்றன. இந்த அதிர்வுகள் பல மைல் தூரத்திற்கு இருக்கும். சுழலும் விசிறிகளில் இருந்து வீசும் காற்று பூமியின் மேற்பரப்பை உலரச் செய்துவிடுகிறது. பல மைல் தூரம் வரை இந்த விளைவு இருக்கும். காற்றாலை அருகில் உள்ள வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு அதிக மின்சக்தி செலவாகும். அந்தப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு அதிகமான நீர் தேவைப்படும்.

காற்றாலைகளினால் ஏற்படும் வானிலை மாற்றங்கள் இரவு நேரங்களில்தான் அதிகமாக இருக்கிறதாம். காற்றுவீசும் வேகம் இரவு நேரத்தில் அதிகமாக இருப்பதுதான் காரணம் என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.தமிழகத்தில் தற்போது காற்றாலைகள் அதிகமாக தோன்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் தமிழக காலநிலையில் மாற்றம் ஏற்படவும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மட்டும் தற்போது சுமார் 4,000-க்கும் மேல் காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. கடலில் மிதவையாகக் காற்றாலைகளை அமைத்து அங்கு வீசும் காற்றிலிருந்தும் மின்சாரம் தயாரிப்பது பற்றி நார்வே போன்ற நாடுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்முயற்சிகள் வெற்றி பெற்றால் மற்ற நாடுகளிலும் மிதவைக் காற்றாலை முறை நடைமுறைக்கு வரும். தமிழ்நாட்டிலும் கடற்கரை ஓரங்களில் காற்றாலைகள் அமைப்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுவருகின்றன.

அமெரிக்காவில் 1930 வாக்கில் விவசாயத்துக்கு நீர் இறைக்கும் பணியினைக் காற்றாலைகளே செய்துள்ளன. டென்மார்க், ஸ்பெயின் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவு இவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் காற்றின் ஆற்றலால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 55 சதவீதம் ஆகும். தமிழகத்தில் பல விதங்களிலும் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 20 சதவீதம் காற்றலைகள் மூலம் கிடைக்கிறது. இது ஏறக்குறைய 2000 மெகாவாட் திறனாகும். தற்போதைய காற்றாலைக் கட்டுமானங்களின் உயரமானது 70 முதல் 100 மீட்டர் அளவில் உள்ளது. காற்றாலையின் பாகங்கள் பிளாஸ்டிக் மற்றும் உலோகங்களால் ஆனவை. எனவே கதிரியக்க ஆபத்து காற்றாலைகளில் இல்லை. தேவையற்ற இரைச்சல் இல்லை. வாயுமண்டலம் அழுக்கடைவதில்லை. ஆனால் காற்றாலைகளில் மின்சக்தி தொடர்ச்சியாக கிடைப்பதில்லை. காற்று வீசாத காலத்தில் மின் உற்பத்தி இருப்பதில்லை. காற்றாலை மின் ஆற்றல் மற்ற வகையான மின் உற்பத்திகளுடன் இணைந்து பயன்படுத்த வேண்டியதாகும்

காற்றாலைகள் அமைந்திருக்கும் பகுதிகளில் கடலை,பயறு போன்றவைகள் பயிரிடப்பட்டன.தற்போது அங்கே விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது .அப்பகுதிகளில் உள்ளுர் பருவநிலை அடிக்கடி மாறுகிறது.உயரமாக பறவைகளும் கூட்டமாக பறப்பதும் சற்று சிரமம் தான். காற்றாலைகள் இருக்கும் பகுதிகளில் சிட்டுக்குருவி,கொக்கு,நாரை,புறா போன்ற பல்வேறு பறவைகள் பறப்பதும் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.

தற்போதைய காற்றாலைக் கட்டுமானங்களின் உயரமானது 70 முதல் 100 மீட்டர் அளவில் உள்ளது. உற்பத்திப் பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த உயரத்தை இன்னும் அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்த பட்டு வருகின்றன. ஓர் ஆண்டில் ஆறு மாதங்கள் வரையுள்ள காற்றடிக்கும் சாதகமான பருவ நிலைகளில் தினமும் 2,000 மெகாவாட் என்ற அளவில் காற்றாலை மின் உற்பத்தி இருக்கும். நாளொன்றுக்குக் காற்றாலை ஒன்றில் இருந்து 1800 யூனிட் வரை மின்சாரம் தயாரிக்க முடியும் . தற்போதைய நிலவரப்படி 225 மெகாவாட் திறனுள்ள காற்றாலை ஒன்றை நிறுவ 1,15,00,000-ரூபாய் செலவாகிறது. ஒரு காற்றாலை அமைக்க 5 முதல் 10 சென்ட் வரையில் அமைந்துள்ள நிலப்பரப்பு போதுமானதாக இருக்கும். காற்றாலைகள் முக்கியம் தான் ஆனால் அதன் பின்னால் இருக்கும் சின்ன சின்ன விளைவுகளையும் நாம் சிந்திப்பது நல்லது.

0 Comments

Write A Comment